Monday, 18 March 2019

தினம் ஒரு மாற்றம்

*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*

*தினம் ஒரு மாற்றம்*
*(18/03/2019)*

அனைவருக்கும் அன்பு என்பது தான் அவசியமாக இருக்கிறது.. அது ஏன் இக்காலத்திலே அரிதாகி விட்டது என்று தான் புரியவில்லை?

ஒரு இயந்தரத் தனமான வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் மக்கள்.

பிள்ளைகளுக்காக சம்பாதிக்கிறோம் என்கிறார்கள், ஆனால் அதே பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்கி ஒன்றாக உணவு சாப்பிடுவதோ அல்லது அவர்களது பள்ளியில், கல்லூரியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை கேட்கத் தயாராகவும் இருக்க வேண்டும் தானே??

குடும்ப உறவுகளிடையே அன்பு எனும் நல்லிணக்கம் கணவன் மனைவி இருவருக்கும் இருந்தால் மட்டுமே... அது வீடு முழுக்கப் பரவும். அவர்களிடத்திலே இருக்க வேண்டுமென்றால் விட்டுக் கொடுக்க வேண்டும், மன்னிக்கும் பழக்கமும், மறக்கும் பழக்கமும் இருந்தால் மட்டுமே  அமைதி காண   முடியும்.

அதற்கு பதிலாக கணவரோ/ மனைவியோ ஏதோ கோபத்தில் அல்லது உணர்ச்சிவசத்தில் பேசிவிட்டால் அதையே நினைத்து நினைத்து, வருந்திக் கொண்டு தன்னையும் வருத்திக் கொண்டு, இருக்கக் கூடாது. சூழ்நிலையின் இறுக்கம் புரிந்து நேர்மறை எண்ண அலைகளை பரப்பும் போது அங்கே தன்னுடைய தவறு அல்லது சண்டை வந்ததற்கான பங்கு தன்னிடம் என்ன இருக்கிறது?  என்று யோசித்தால் இருவருமே சமாதானம் அடைய முடியும்..

ஒரே ஒரு மன்னிப்பு கேட்பதில் என்ன குறைந்தா விடப்போகிறோம்.. அந்த ஒற்றை சொல் இரு மனங்களிடையே இருக்கும் மனஇறுக்கத்தையும்,  மன இடைவெளியையும் குறைக்கும் தானே!!

ஏன் முயற்சித்து ஒற்றுமை பேணி பிள்ளைகளுக்கு ஒரு  எடுத்துக்காட்டாக வாழலாம் தானே!

இன்றைய சூழ்நிலை பலவாறு யோசிக்கத் தூண்டுகிறது பிள்ளைகளுக்கு.. அதை பெற்றோர்கள் வீட்டில் குடும்பத்தில் ஏற்படுத்தாமல் இருந்தால்... பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.. அவர்களது எதிர்காலமும் சிறப்பாக அமையும்.

அன்புடன் ஜே.கே

No comments: