வாழ்க வையகம் !
வாழ்க வையகம் !
வாழ்க வளமுடன் !!
*தினம் ஒரு மாற்றம்* (10/03/2019)
தனது சுகபோகமான சூழலிருந்து சற்றே வெளியே வந்து பார்த்தால் தான் உண்மைநிலை ஒருவருக்குப் புரியவரும்..
வாழ்க்கை மேடு பள்ளங்கள் கொண்டதே.. பாவ புண்ணியங்களும் கொண்டது.. தூய்மை அசுத்தம் கலந்தது தான். வேண்டாததை ஈர்க்காத வரை வேண்டியதை மட்டும் ஈர்க்கும் பண்புடனே தான் ஒவ்வொருவரும் வாழ்கிறார்கள்.
வேண்டாததை .. அதாவது எதிர்மறைகளை ஈர்க்கப் பழகும் போது தான் ஒருவருக்கு பல சிக்கல் உண்டாகிறது..
சிக்கலை மேலும் சிக்கலுக்கு உண்டாக்கி அதிலிருந்து வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர்.
அனைத்து கேள்விகளுக்கும் பிரபஞ்ச காந்த களத்தில் பதில்கள் உண்டு.. கேள்விகள் சரியாக இருந்தால், பதிலும் சரியாகவே இருக்கும்.
அனைத்து பூட்டுகளுக்கும் சாவிகள் உண்டு.. எந்த பூட்டுக்கு எந்த சாவி என்பதை தான்.. ஒருவருக்கு கண்டுபிடிக்கத் தெரிய வேண்டும். சாவிகளை தேர்ந்தெடுக்கும் விதம்.. கண்டுபிடிக்கத் தெரிந்தால் அனைத்து பூட்டுகளுமே திறந்து கொள்ளும்.
கவலைகள் என்பது ஒருவர் தானே பின்னிக் கொள்ளும் கற்பனை வலை.. வெளியில் வந்து சுய சிந்தனை கொண்டு யோசித்தால்... தனது முடிவுகளும், தீர்வுகளும் யாருக்கு லாபம்? யாருக்கு நட்டம் என்பது தெரிய வரும். தெரிய வந்தால் கொஞ்சம் விட்டுக் கொடுக்கப் பழக முன் வரத் தோன்றும். சிக்கலும் தீர்வுக்கு வரும்.
தனது வாழ்க்கை நலத்திற்கு நல்ல தீர்வுகளை சுயமாக எடுப்பதே நல்லது.
அன்புடன் ஜே.கே
No comments:
Post a Comment