*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*
*தினம் ஒரு மாற்றம்*
*(15/03/2019)*
புது வீடு கட்டுவதற்கு முன் காலி இடத்தில் உள்ள குப்பைகளை, தேவையில்லாத செடிகொடி, புதர்களை, நீக்குவோம்.
அது போலவே சில நல்ல விஷயங்களை செய்ய வேண்டுமானால்.. புதிய சமுதாயம் உருவாக வேண்டுமானால்.. கதிர்களூடே சில தேவையில்லாத களைகளை நீக்குவது போல், சிலவற்றை அப்புறப்படுத்தித் தான் ஆக வேண்டும்.
மீண்டும் அதனால் எவ்விதத் துன்பமும் ஏற்படாதவாறு வேருடன் பிடுங்கி எறிய வேண்டும். நன்கு வளரும் பயிர்களூடே விஷப்பயிர்களை வளரவிடக்கூடாது. வளர விட்டால் நல்ல பயிற்களைகளும் வீணாகிப் போய்விடும். குப்பையை, கழிவை நீக்கினால் தான் தூய்மை வரும்.
நோய்களுக்கு மருந்து கொடுத்து சரி செய்கிறோம். ஆனால் இயற்கை நமக்கு அளித்த உணவே மருந்தாக உட்கொள்ளும் தன்மையை ஏற்க மனதைப் பழக்கப்படுத்த வேண்டும். அது நோய் வருமுன் காக்க உதவும். சமையலறையில் உள்ள பொருட்களும் புதிதாக உள்ள காய்கனிகளும், உணவே மருந்தாகும். , மனதில் தூய்மை வேண்டுமானால் தவமும் தற்சோதனையும் அவசியம். உடலில் ஆரோக்கியம் மேம்பட இயற்கை உணவும், உடற்பயிற்சியும் அவசியம்.
மிக முக்கிய விஷயம் எதிலும், ஐந்தில் அளவு முறையும் அவசியம். உணவு, உழைப்பு, உறக்கம், பாலுறவு, எண்ணம்.. இவைகளில், அந்தந்த பருவத்திற்கேற்ற நேர்மையான அணுகுமுறை அனைத்திலும் அவசியமான பண்பாகும். மித மிஞ்சிய உபயோகம் கூடாது, பயன்படுத்தாமலும் இருக்கக் கூடாது, அலட்சியப்படுத்தவும் கூடாது, முரண்பட்டும் உபயோகிக்கவும் கூடாது. அளவுமுறை அந்தந்த எல்லைக்கோட்டுக்கு உட்பட்டு நிற்கப் பழகுதல் வேண்டும்.
அன்புடன் ஜே.கே
No comments:
Post a Comment