வாழ்க வையகம் !
வாழ்க வையகம் !
வாழ்க வளமுடன் !!
தினம் ஒரு மாற்றம் (07/03/2019)
வாழ்க்கை என்பது.. குடும்ப நபர்கள் ஒற்றுமை நல்லிணக்கமாக, அழகான நறுமணம் வீசிக் கொண்டிருக்கும் நந்தவனம் போன்று... அங்கே உள்ள அனைத்து இடங்களிலும் நறுமணம் கமழ்ந்து வீசிக் கொண்டே இருக்கும்.
ஒவ்வொருவர் பங்களிப்பும், ஒவ்வொரு மலரின் நறுமணம் போன்று அங்கே மணம் பரப்ப வேண்டும்.. அதில் எந்த மணமாக இருந்தாலும் அங்கே அது தனியாக தெரியாமல் கூட்டு முயற்சியாகவே தெரியும்.
தனி மரம் தோப்பாகாது. தனிமை என்பது அனுபவிக்கும் சிலரை கேட்டால் தெரியும். எப்பொழுதும்... அந்தத் தனிமையை இனிமையாக பயனுள்ளதாக மாற்றும் சிந்தனைத்திறன் உள்ளவர்கள் சிலரும் உள்ளனர். அதை ரணமாக்கி வாழ்க்கையை துன்பத்துள்ளாக்கி வாழ்பவர் சிலரும் உள்ளனர்.
இருப்பது ஒரு வாழ்க்கை. அதை மகிழ்ச்சியாகவும், பிறருக்கு அன்பு செய்தும், மன்னிப்பை கொடுத்துப் பழகியும் வாழப் பழகிக் கொண்டால் சிக்கல் என்ற சொல்லுக்கே இடமிருக்காது.
Ups and downs.. வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் வரும் போது அதைக் கடந்து போகக் கற்றுக் கொண்டால் எதையுமே சுலபமாகக் கடக்க முடியும்.
ஒவ்வொருவரின் கர்மவினை என்பது மீளாத் துயர் அல்ல.. மீண்டு வர இறைநிலை ஒவ்வொரு வாய்ப்பை அளிக்கிறது.. அதை கேட்பதற்குத் தான் மனதில் இடம் கொடுக்க வேண்டும். மனதை காலியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். எண்ணங்களை குவியலாக போட்டுத் திணித்து மனதை அடைத்து வைக்கக் கூடாது.
அது புற உலகிலிருந்து அக உலகிற்கு சென்றால் மட்டுமே சாத்தியம். புற உலகம் என்பது மாயை.. கண் கட்டி வித்தை. அதில் மயங்கி தன்னிலையை இழந்தால் விழிப்புணர்வு கிட்டாது. அறிவு அறிவில் இயக்க வேண்டும். புலன்களில் அல்ல. வாழ்க்கைப் பாதைக்கும் இலக்கை அடைவதற்கும், தியானப்பயிற்சி வழி காட்டும்.
அன்புடன் ஜே.கே
No comments:
Post a Comment