Saturday, 9 March 2019

தினம் ஒரு மாற்றம்

வாழ்க வையகம் !
வாழ்க வையகம் !
வாழ்க வளமுடன் !!

*தினம் ஒரு மாற்றம்*     (08/03/2019)

இன்று உலக மகளிர் தினம்.

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்  'சிறப்புணர்ந்த பெண் மதிப்பு', 'பெண்ணின் பெருமை' , குடும்ப அமைதி, போன்ற தலைப்புகளில் பெண்மையை சிறப்பாகக் கூறியிருப்பது மட்டுமல்ல.. தனி மனித அமைதிக்குப்பின்,  குடும்ப அமைதி வேண்டும் என்றால் ஒரு கணவனாக, மனைவியாக அந்தக் குடும்பத்தில் பெண்ணுக்குக் கொடுக்கப்பட வேண்டிய மதிப்பும், மரியாதையும் எப்படி அந்தப் பெண்/ஆண் பெற வேண்டும் என்கிற பண்புநலன்களை ஒழுக்க நெறிகளை மனவளக்கலை கற்றுத் தருகிறது.

தனது தரம் உயர வேண்டுமென்றால், அங்கே குணநலன்களில் சில நல்லதொரு மாற்றங்கள் வர வேண்டும் இரு தரப்பிலும். குடும்ப உறவுகளில் நல்லிணக்கம் பேண, கணவன் மனைவி உறவு மேம்பட, ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும் என்கிற அறநெறிகளை, எளிமையாக கடைபிடிக்கச் செய்பவர் மகரிஷி அவர்கள்.

எத்தனையோ அன்னையர் தினம் தந்தையர் தினம்.. இப்படி இருக்கையில் மனைவிக்கு மதிப்புக் கொடுப்பதற்காக.. மனைவிக்குக் கிடைக்க வேண்டிய சகல மரியாதையும் பிறரால் வருவதல்ல.. தனது நன்னடத்தையாலும் அன்பாலும் வரக்கூடியது என்பதை அனைவருக்கும் உணர்த்தியவர்.

'மனைவிநல வேட்புநாள்' என்று  தனது மனைவிக்கு மரியாதை கொடுத்து அன்னை லோகாம்பாள் அம்மையார் அவர்களது பிறந்த தினத்தை ஆகஸ்டு 30 ஆம் தேதி  மனைவிக்கான நாளாக,   கொண்டாடப்பட்டு வருகிறது..

பெண்மையை மதிப்பதால் அந்த வீடும், குடும்பமும், நாடும், சிறக்கும் என்பது இதன் மூலம் அறிந்தும் உணர்ந்தும் கொள்ளலாம்.

பெண்மையை மதித்துப் போற்றுவோம்.

அன்புடன் ஜே.கே

No comments: