Tuesday, 12 March 2019

தினம் ஒரு மாற்றம்

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்*  (26/01/2019)

பஞ்ச பூதத்தில் விண்:

ஆகாயம் என்பதையே விண் என்கிறார்கள். அணு என்றும், வானம் என்றும் அழைக்கிறார்கள். விண் கூட்டே மூலகங்களாக பஞ்ச பூதங்களாக ...மனித உடலில் உயிர்த்துகள்களாக உள்ளது..

பஞ்சபூதக் கூட்டு தான் இந்த மனித உடலாகும். கோடிக் கணக்கான செல்களின் தொகுப்பும் ஆகும். அதில் தனித்து இயங்கும் விண்களின் அதாவது உயிர்த்துகளின் சுற்றோட்டம் தான் உயிர்.

உயிர் ஒரறிவு தாவரத்திலிருந்து ஆறறிவு மனிதன் வரை உயிர் உண்டு.

பிறப்பும் இறப்பும் வித்துவின் கழிவிலே என்று அருட்தந்தை அவர்கள் கூறுவார்கள்.
ஒரு உயிர் தோன்ற காரணமாக புனிதமான உறவே,  கணவன் மனைவி உறவு. இருவருக்குமே சம பங்கு உண்டு. ஆனால் தாய்மை அடையும் பெண்ணின் பங்கு சற்றே கூடுதல் பொறுப்பு மிக்கது. அதற்கு கணவரான ஆண்மகனின் கடமையும் சளைத்ததல்ல..

உயிர் மதிப்பு முழமையடைவதில் தான் நிறைவடையும். ஆனால் அதற்குள் எத்தனை எத்தனை துன்பம்... 

ரோட்டில் வண்டி ஓட்டும்  போது டிராபிக் ரூல்ஸ் மதியாமல் உயிரின் மதிப்பை உணராமல். ..எத்தனை விபத்துக்கள்..

ஹெட்போன்ஸ் போட்டுக் கொண்டு தான் ரோட்டை கடப்பேன்.. பின்னாடி யார் வந்தாலும், எத்தனை ஹார்ன் அடித்தாலும் கேட்காத அலட்சியம் எத்தனை பேரிடம்.. இதை பார்க்கும் எத்தனை நபர் இவங்க எல்லாம் சொல்லிட்டு வந்துட்டாங்க போல... என்று சாப அலைகளை வீசுகிறார்கள் அவர்கள் மீது...  ரயில் தண்டவாளத்தில் கடக்கும் போது இதனால் எத்தனை பேர்... உயிர்....

படிப்பில் மதிப்பெண் பெறவில்லை என்றால் வீட்டில் திட்டு... மதிப்பெண் எடுத்தே ஆக வேண்டும் என்று பள்ளிக் கூடத்தில் Pressure... பிள்ளைகளின் உயிரோடு எத்தனை பேர் விளையாடுகிறார்கள்....

விபத்தில் எத்தனை பேரின் உயிரிழப்பு... ஏன்.. என்று உணர்கிறார்களா?? எத்தனை தற்கொலை..

அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம்...

வீட்டில் தனக்காகக் காத்திருக்கும் பெற்றோர், குடும்பத்தினருக்கு, தனது கடமைகளை செய்ய வேண்டும் என்பதும், வாழ்வின் நோக்கமறியா அறியாமையும், உணர்ச்சிவசத்தில் எடுக்கும் சில முடிவுகளும் என்றுமே நிலையானது அல்ல..

பாலியல் வன்முறை... இத்தனை வன்முறை பெண்கள் மீது ஏன்??

பெண் மதிப்பு உணராமை.. பெண்ணை தரக்குறைவாக சினிமாக்களிலும், மீடியாக்களிலும், இணையத்திலும், .. காட்டுவது... ஊடங்கங்களில் முறையாக, மதிப்பாக, பயன்படுத்த மக்கள் முன் வர வேண்டும்.

பெண்களின் கண்ணியமற்ற ஆடை இன்று Trend ஆகி விட்டது.. மேல்நாட்டு மோகம்.. மேல் நாட்டவர்களின் இந்தியர்களை தமிழர்களை பின்பற்றுகிறார்கள்.... அவர்களுக்கு முன்னுதாரணமாக.... தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் பெண்களுக்கு வர வேண்டும்.

மத்தவங்க பார்வையை மாத்த சொல்லுங்க..ன்னு சில பெண்கள் கூறுவதை பார்க்க முடிகிறது.. தானே மாற்றிக் கொள்ளாத விஷயத்தை பிறர் மட்டும் எப்படிங்க மாத்துவாங்க??

பெண்களின் கண்ணியம், மானம், மதிப்பு, பெண்களிடத்தில் தான் உள்ளது..

ஆண்களின் பார்வைக்கு சகோதரிகளாக, மகள்களாக, தாயாக, தெரிய வேண்டும். அதே போல் ஆண்களும் பெண்களின் பார்வைக்கு தந்தையாக, மகனாக, சகோதரனாகத் தெரிந்தால் போதும்.

அவரவர் கணவன் மனைவியருக்கு மட்டும் ஹீரோவாக, ஹுரோயினாக இருக்க முயற்சித்தால் பல பேருக்கு இன்றைய பால் கவர்ச்சி தோன்றாது.

தவறான வழிகளில் பாலுணர்ச்சிக்கு இடம் கொடுப்பதன் விளைவு பால்வினை( AIDS) எனும் உயிர்க் கொல்லி நோயை ஏன் வரவழைக்க வேண்டும்?

மேலும் இன்றைய செய்திகளில் சில பேரின் பார்வைக்கு அவரவர் தேடுதலுக்கேற்ப கிடைக்கிறது.. அரசியல் வம்பு தும்புகள் முதல் ஆன்மீகம் வரை.... 

நல்ல விஷயங்களை பார்க்காமல், தவறான விஷயங்களை மீண்டும் மீண்டும் பார்த்து தனக்குத் தானே மனதில் சில அவசியமற்ற விதைகளை விதைத்து செடியாக  அந்த காட்சிகளை ஒவ்வொருவரும் கருமையத்தில்,  மனதில், மூளை செல்களில், உயிர்த்துகள்களில் சீவகாந்தத்தில்,  வான்காந்தத்தில் சமுதாயப்பதிவாக மோதி யாரெல்லாம் அந்த எண்ணங்களை நினைக்கிறார்களோ அவர்களிடமும், அவர்களின் பிள்ளைகளிடமும் பிரதிபலிக்கின்றது.. திருட்டு, கொலை, கொள்ளை என்பதும் இப்படித் தான் .. நிகழ்கின்றது..

தனது எண்ணமும், சொல்லும், செயலும், தூய்மையாக இருந்தால் அது அனைவருக்குமே போய் சேரும். ஆனால் ஒரு தவறான எண்ணம் எத்தனை பேருக்கு அநீதியை இழைக்க மக்கள் நாமே காரணமாக இருக்கலாமா??

பல உயிரின் வருத்தம் சாபமாகப் பெறுவது.... நலம் விளைவிக்குமா???  மக்களுக்கு விளைவறிந்த விழிப்புணர்வை வரவழைக்க வேண்டும். உயிரின் மதிப்பை உணர வேண்டும்.

செயல் விளைவை உணர்ந்து தெளிக...

அன்புடன் ஜே.கே

No comments: