Monday, 11 March 2019

தினம் ஒரு மாற்றம்

*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*

*தினம் ஒரு மாற்றம்*
*(11/03/2019)*

எத்தனையோ தவறுகள், பிழைகளை செய்வதிலிருந்து தன்னை திருத்திக் கொண்டு கடந்து தான் வருகிறான் மனிதன்.. மீண்டும் அதே தவறை செய்ய விரும்புவதில்லை... ஆனாலும் புலன்பற்றுதல்....  மீண்டும் ஒன்றையே திரும்பத் திரும்ப நினைக்கவும், செய்யவும்  தூண்டுகிறது. ஏன்??

திருத்தம் தூய்மைக்கு மட்டுமே வழிவகுக்க வேண்டும். இயல்பில் அப்படி நிகழ்கிறதா?? மனித மனம் தனது அறிவை ஐந்தறிவில் மட்டும்.. அதாவது ஐம்புலனில் மட்டுமே..  இயக்கிப் பழகிவிட்டது.. அது தான் புலனறிவு.. மெய்யறிவு என்று ஒன்று உண்டு.. அது தான் ஆறாவது அறிவாகிய தெய்வீக அறிவு..

ஒரு விஷயமாகட்டும், உணவு, உடை .. பொருட்கள்.. நபர்.. பிடித்த விஷயம், பிடிக்காத விஷயம், கற்பனையாக தானாக உருவாக்கிக் கொண்ட விஷயம்..அலைபேசி.. கணினி... என்று இப்படி ஏதாவது ஒன்றை பிடித்துக் கொண்டு மனதை அதிலேயே மூழ்க வைத்து விட்டு...  அதைபற்றி மட்டுமே அசை போடுவது... அறிவுக்கு பொருத்தமானதா??

தன்னை ஒன்றில் மூழ்கடிக்கும்/ அடிமைப்படுத்தும்  விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கலாமா?? அது தன்னை எவ்வளவு நேரம் ஆக்கிரமிக்கிறது? அதற்கு மனதில் இடம் கொடுக்கலாமா?? இவ்வாறு சிந்தித்தால்.... அதில் சில கேள்விகள் எழும்.

1) தனக்கு பிடித்ததை/ பிடிக்காததை மீண்டும் யோசிப்பதில் என்ன தவறு ...என்று..?

2) யோசிப்பதால் தனது கடமைகள் பாழாகிறதா?? இது சரி வருமா?? ...என்று..?

3) யோசிப்பதால் தனக்கும் பிறருக்கும் நலம் விளையுமா? தீமை விளையுமா?? என்று..?

4) பிடித்ததில் கவனம் செலுத்துவது நன்மை பயக்குமா.. ? தனக்கு நலம்... பிறருக்கும் நலம்.. விளைவிக்கும் விஷயத்தில் கவனம் செலுத்துவது நன்மை பயக்குமா?? என்று..?

அவரவர் சுய சிந்தனைக்கு ...

அன்புடன் ஜே.கே

No comments: