வாழ்க வளமுடன்.
அருட்தந்தையோடு அருளானந்தனின் அனுபவங்கள்.
பாகம் : 8
ஆழியாறு அறிவுத் திருக்கோயில் அமைக்கப்படுதல்.
25.12.1985 அன்று அருட்தந்தை அவர்களின் முன்னிலையில், அருட்செல்வர் டாக்டர் N. மகாலிங்கம் அவர்களின் தலைமையில் அறிவுத் திருக்கோயிலுக்கான கால்கோல் விழா இனிதே நடைப்பெற்றது. பொள்ளாச்சியில் உள்ள அருட்செல்வர் அவர்களுக்குச் சொந்தமான "காந்தி மண்டபத்தில்" 25.12.1985 முதல் ஒரு வார ஆசிரியர் பயிற்சியை அருட்தந்தை அவர்கள் நடத்தினார்கள். இந்தப் பயிற்சியில் சுமார் 300 அன்பர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் நானும் ஒருவன்.
நாங்கள் அனைவரும் அறிவுத் திருக்கோயில் கால்கோல் விழாவில் கலந்து கொள்ளும் நல்வாய்ப்பைப் பெற்றோம்.
1986 ஆம் ஆண்டு முதல் ஆழியாறு அறிவுத் திருக்கோயில் வளாகத்தில், அருட்தந்தை அவர்கள் பயிற்சிகளை நடத்துதல்.
**************
25.12.1985 முதல் கட்டிடப் பணிகள் சிறப்பாக நடைப்பெற்றன. அருட்தந்தை அவர்கள் அந்த வளாகத்தில் தங்கி ஆசிரியர்ப் பயிற்சி, மௌன நோன்பு நடத்துதல், போன்ற சேவைகளைச் செய்வதற்கு ஏதுவாக, 'வள்ளலார் குடில்' அமைக்கப்பட்டது. அதே சமயத்தில் பயிற்சி நடத்துவதற்கு ஏதுவாக சுமார் 300 பயிற்சியாளர்கள் வசதியாக அமரும் வகையில் ஒரு கட்டிடம் அமைக்கப்பட்டது.
தொடரும்......
No comments:
Post a Comment