வாழ்க வளமுடன்.
அருட்தந்தையோடு அருளானந்தனின் அனுபவங்கள்.
பாகம் : 9.
உலக சமுதாய சேவா சங்கத்தின் அகில உலக தலைமையகத்திற்குச் (International Head Quarters) சொந்தக் கட்டிடம் அமைக்கப்படுதல்.
உங்களுக்கு ஏற்கனவே தெரிவித்தப்படி, 1983 ஆம் ஆண்டு உலக சமுதாய சேவா சங்கத்தின் வளர்ச்சிக்கு (Developement) சிறந்த திருப்பு முனையாக அமைந்தது என்பதற்கு முதன் முதலாக சங்கத்தின் சொந்தக் கட்டிடம் அமைக்கப்பட்டது ஒரு சான்றாகும்.
1981 ஆம் ஆண்டு ஆகஸ்டு 14 ஆம் தேதி, அருட்தந்தை அவர்களின் 71 ஆவது பிறந்த நாள் வழக்கம் போல் சென்னையில் கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் மனவளக்கலை யோகா பயின்ற அன்பர்களின் அன்பளிப்பாக ரூபாய்.71,000/- பிறந்தநாள் பரிசாக (Gift) அளிக்கப்பட்டது. இத்தொகையை அருட்தந்தை அவர்கள் நமது சங்கத்திற்கென ஒரு சொந்தக் கட்டிடத்தை அமைப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், பொதுச் செயலாளரிடம் வழங்கினார்கள். இத்தொகையைக் கொண்டு, சென்னை, திருவான்மியூர், வால்மீகி நகரில் ( தற்போது தலைமையகம் இருக்கும் இடத்தில்) சங்கத்தின் சொந்தக் கட்டிடத்தை அமைப்பதற்கான பணி தொடங்கப்பட்டது.
மனவளக்கலையைக் கற்றுப் பயன்பெற்று வந்த பல அன்பர்களின் நன்கொடைத் தொகையைப் பயன்படுத்தி, இக்கட்டிடப் பணி முடிக்கப் பெற்றது.
இந்தக் கட்டிடம், அருட்தந்தை அவர்களின் தலைமையில், பல்துறை அறிஞர்கள், பயிற்சிப் பெற்ற அன்பர்கள் - ஆகியோர் கலந்து கொண்ட ஒரு சிறப்பு நிகழ்ச்சியில், 25.11.1983 அன்று திறக்கப்பட்டது.
அருட்தந்தை அவர்கள் வெளியூர் மற்றும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளாத நாட்களில் இங்கு தங்கி, ஆன்மீக சேவையையும், நிர்வாகப் பணிகளையும் செய்து வந்தார்கள்.
தொடரும்....
No comments:
Post a Comment