Wednesday, 6 March 2019

தினம் ஒரு மாற்றம்

வாழ்க வையகம் !
வாழ்க வையகம் !
வாழ்க வளமுடன் !!

தினம் ஒரு மாற்றம்   (06/03/2019)

வேண்டியவை அனைத்தும் இறையருளால் அன்பும் கருணையாக அளிக்கப்பட்டு வருகிறது. அதில் நிறைவு கொண்டு வாழ்வதே மனித சமுதாயத்துக்கு நன்மை பயக்கும்.

இல்லாதவைக்கும் , இயலாதவற்றுக்கும், ஏங்குவதும், ஏமாறுவதும் நடைமுறையில்
சிலபேரிடம் காணமுடிகிறது.

மனநிறைவு கொள்வதில்  தடுமாற்றம் ஏன் வருகிறது??

தான் என்கிற அதிகாரப்பற்றும், , தனது என்கிற பொருள்பற்றும், தான் மட்டுமே அனுபவிக்க வேண்டும்... என்கிற எண்ணத்தை கைவிட்டால், பிறர் அனுபவிப்பதை பார்த்து .. தனக்கு இல்லையென்றாலும்  பிறராவது அனுபவிக்க இறையருள் கருணை புரிகிறதே என்று தோன்றும். .. பொறாமைப்படத் தோன்றாது. அது பிறருக்கு விட்டுக்கொடுப்பதால் பிறரும்  மனதோடு வாழ்த்துக் கூறுவர், மனம் நிறைந்து வாழ்த்து கூறுவர்.

பல விஷயங்கள் மனதில் கற்பனையாக போட்டு அலட்டிக் கொள்ளாமல், பொய்யான வாழ்க்கைக்கு இடம் கொடுக்காமல், அறிவுக்குப் பொருந்தும் நிகழ்கால நிகழ்வுகளை மட்டுமே ஏற்றுக் கொண்டு, அல்லதை விடுத்து, எப்பொழுதும் இறைவனின் அருகில் இருக்கிறோம் என்ற நினைவோடு, தன் வேலைகளை முழுமனதோடு செய்தாலே போதும்.

இயற்கையோடு ஒத்திசைந்து வாழும் போது, அது நமக்கு உறுதுணையாக  இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை.

அன்புடன் ஜே.கே

No comments: