Wednesday, 20 March 2019

தினம் ஒரு மாற்றம்

*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*

*தினம் ஒரு மாற்றம்*
*(20/03/2019)*

அனுபவம் என்பது எப்படி ஒருவருக்கு நேர்கிறது? இதையே சொல்புத்தி, சுய புத்தி அல்லது அனுபவப்பட்டு உணர்வது... சிலர் மீண்டும் மீண்டும் ஒரே தவறை சுயநினைவு இன்றி செய்து தன்னை உணர்கிறார்கள்...  கடைசி காலத்தில்.. இதையே 'கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் ' .., 'காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்,' என்றும் பல பழமொழிகளை அறிவுரைகளாக  நம் முன்னோர்கள் கூறிவிட்டு சென்றிருக்கிறார்கள்.

அந்த அனுபவம் கொடுக்கும் ஆற்றல் அபரிமிதமானது. அதை கேட்டு நடந்தாலே போதும்.. அல்லது சுயமாய் சிந்தித்துத் தெளிந்தாலும் போதும்.

எவ்வளவு விழிப்புணர்வு பேச்சாளர்கள்,  எச்சரிக்கைப் பதிவுகள், காணொலிகள்,  கேட்பொலிகள் வந்த வண்ணம் உள்ளது... என்றால் மக்கள் மனமாற்றமும் ஆங்காங்கே வந்து கொண்டு இருக்கிறது என்று தானே பொருள்..

ஒரு புயல் வந்தால் ஒற்றுமை வருகிறது, ஒரு வெள்ளம் வந்தால் மனித நேயம் மலர்கிறது, நில அதிர்வு வந்தால் வீடுகளை ஏரி இருக்கும் இடங்களில் கட்டக்கூடாது என்ற எச்சரிக்கை வருகிறது. வன்முறை வந்தால் அஹிம்சை அறப்போராட்டாமாக நிகழ்கிறது..

ஆனால் அனுபவங்கள் கொடுக்கும் பாடம் அப்போதைக்கு மட்டுமே என்று எடுத்துக் கொண்டு அப்படியே விட்டுவிடக்கூடாது. எஞ்சியிருக்கும் வாழ்க்கையை தொடர்ந்து கடைபிடித்தால் மட்டுமே வாழ்க்கை சிக்கல் இல்லாமல் வாழ முடியும் என்கிற விழிப்புணர்வு வரவேண்டிய காலகட்டத்தில் அனைவரும் இருக்கிறோம் என்பது சிந்திக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.

வருமுன் காக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

சுயமாக சிந்தித்து எதிர்கால வாழ்க்கையை... அனைத்து சீர்திருத்தங்களையும் மேற்கொண்டு இனிமையாக வாழ, விழிப்புணர்வுடன் செயலாற்ற, கல்வியறிவுடன்.. இயற்கை பற்றிய அறிவும் தேவையாக இருக்கிறது. அதற்கு மனவளக்கலை யோகக் கல்விமுறை இன்றைய காலகட்ட முழுமை நல  கல்வியாகத் திகழ்கிறது என்பதை முழு மனதோடு ஏற்கக்கூடியதாக உள்ளது.

அன்புடன் ஜே.கே

No comments: