Thursday, 21 March 2019

அருட்தந்தையோடு் அருளானந்தனின் அனுபவங்கள்

வாழ்க வளமுடன்

அருட்தந்தையோடு அருளானந்தனின் அனுபவங்கள்

பாகம் : 11

சூரியனிலிருந்து வரக்கூடிய ஆற்றல் மிக்க காந்த அலைக் கதிர்கள் உடலையும், அறிவையும் தூய்மைப்படுத்தட்டும். மேன்மைப்படுத்தட்டும்.

சூரியன் மீது மனம் வைத்து சில மணித்துளிகள் தவம் செய்த பிறகு, அருட்தந்தை அவர்கள் கீழ்க்காணுமாறு கூறுவார்கள்.

"இப்போது சூரியன் பேரியக்க மண்டலத்தின் மையத்தில் இருப்பதாக எண்ணிக் கொண்டு சூரியனின் எல்லா திசைகளிலும் மனதை விரித்து, பல்லாயிரம் கோடி நட்சத்திரங்களையெல்லாம் அகக் கண்களில் காண்கிறோம்."

"இவற்றையெல்லாம் கடந்து பேரியக்க மண்டல (சக்திகள)த்தின் எல்லை வரை மனதை விரித்து, பேரியக்க மண்டல (சக்திகள)த் தவம் செய்கிறோம்.

தற்போது, பேரியக்க மண்டலமே உங்கள் மனதில் அடக்கம். எனவே, மனித மனதின் சிறப்பை (ஆற்றலை) உணர்வோம்.

பேரியக்க மண்டலத்தை மனதில் வைத்து சில மணித் துளிகள் தவம் செய்த பிறகு, பேரியக்க மண்டலம் மாபெரும் கோள வடிவமானது, அதனைச் சூழ்ந்தும் அப்பாலும் எல்லையற்ற பெருவெளி சுத்தவெளி உள்ளது.

இப்போது உங்களது மனம், பேரியக்க மண்டலத்திற்கு அப்பால், எல்லா திசைகளிலும் விரிந்து, விரிந்து சென்று சுத்தவெளியோடு இணைகிறது.

துரியாதீத தவத்தைப் பற்றி அருட்தந்தை அவர்கள் கூறியுள்ள கூடுதலான விளக்கங்களை நாளைக் காணலாம்.

தொடரும்....

No comments: