அருட்தந்தையோடு அருளானந்தனின் அனுபவங்கள்
பாகம் : 5
1982 மற்றும் 1983 ஆண்டுகள் நமது சங்கத்தின் வரலாற்றிலும், வளர்ச்சி வேகத்திலும் திருப்புமுனையாக அமைந்தன என்பதைக் கீழ்க்காணும் செய்திகளைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.
1982 ஆம் ஆண்டில் தான், 1997 ஆம் ஆண்டு முதல் நமது சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் முழு ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் நமது சங்கத்தின் வளர்ச்சிக்கும், ஆழியாறு அறிவுத் திருக்கோயிலின் மேம்பாட்டிற்கும் மகத்தானச் சேவைகளைச் செய்து வருபவரும், இந்திய அரசு அவரது உன்னதமான சமூக சேவைக்காக வழங்கிய பத்மஸ்ரீ விருதினைப் (Padmashri award) பெற்றுள்ளவருமான மதிப்பிற்குரிய அருள்நிதி S.K.மயிலானந்தன் அவர்கள் அருட்தந்தையிடம் தீட்சைப் பெற்றார்கள்.
இதேப்போல் ஆழியாறு அறிவுத்திருக்கோயில் அமைப்பதற்கான இடத்தைப் பெறுவதற்கு அருட்தந்தை அவர்களுக்கு உதவியதோடு, இந்த அறிவுத்திருக்கோயில் மிகச் சிறந்த முறையில் கட்டி முடிப்பதற்கும், பின்பு இதன் விரிவாக்கத்திற்கும், வளர்ச்சிக்கும் முழு ஈடுபாட்டுடன் தன்னை அர்ப்பணித்து வரும் அருள்நிதி சின்னசாமி அய்யா அவர்கள் அருட்தந்தையிடம் தீட்சைப் பெற்றார்கள். அவர்கள் தீட்சைப் பெறுவதற்கு ஊக்கமளித்த அன்புத் துணைவியார், அருள்நிதி மனோரமா அம்மையார் ( என் குருநாதர் நூலை எழுதியவர் ) அவர்களும் அருளாசானிடம் தீட்சைப் பெற்றார்கள்.
எனவே அ/நி SKM அவர்களின் குடும்பத்தினரும், அ/நி சின்னச்சாமி அய்யா அவர்களின் குடும்பத்தாரும் உலக சமுதாய சேவா சங்கத்தின் சீர்மிகு வளர்ச்சிக்கும், ஆழியாறு அறிவுத் திருக்கோயிலின் விரிவாக்கம், செயல்பாடு மற்றும் வியத்தகு செயல்பாடுகளின் மேம்பாடு, இவற்றிற்கு பிற அறங்காவலர்களோடு இணைந்தது, "உற்ற செல்வம், உடலுழைப்பு, அறிவு இவற்றைக் கொண்டு ஆற்றி வரும் தொண்டினை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து அவர்களைப் பாராட்டுவோம்.
" அருட்பேராற்றல் கருணையினாலும், அன்பே வடிவான அருட்தந்தை அவர்களின் நல்லாசியினால் இவ்விரண்டு குடும்பத்தினரும் அனைத்து வளங்களும் நிறைவாகப் பெற்று, (முழுமை நலத்துடன்) வாழ்க வளமுடன் பல்லாண்டு என உளமாற வாழ்த்துவோம்.
தொடரும்....
No comments:
Post a Comment