Tuesday, 12 March 2019

தினம் ஒரு மாற்றம்

*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*

*தினம் ஒரு மாற்றம்*
*(12/03/2019)*

குடும்பம் என்பது கோயில்..  பல ஆன்மாக்கள் சங்கமித்து, பல உயிர்களை உறவுகளாக  இறைநிலை தேர்ந்தெடுத்து, அமைதி, மகிழ்ச்சி, மனநிறைவு, இருக்கும் இடமாக கருதும் ஒரே இடம்.. ஆனால் அப்படி இருக்கிறதா தற்காலத்தில்??

தனிக்குடித்தனம், தனி சமையல், தனிமை. தனிமை பல தரமுடைய வாய்ப்பை ஏற்படுத்துகிறதா? யாருக்கேனும் இதில் நல்வாய்ப்பாக அமைந்திருக்கிறதா?? சுயசிந்தனை வேண்டும்.

அக்காலத்தில் வீட்டில் தாத்தா, பாட்டி, பல உறவுகள் ...  குடும்ப ஒற்றுமை, நிர்வாகம், விட்டுக்கொடுத்தல், சகிப்புத் தன்மை, இவை ஒட்டுமொத்தமாக கூட்டுக் குடும்பத்தில் மட்டுமே பார்க்க முடிந்தது.

தற்காலத்தில் ஒவ்வொருவரிடமும் ஒரு எதிர்பார்ப்பு..ஆசை ..பேராசையாக.. .. மாறுகிறது.  உறவுகளிடையே அன்பும் நல்லிணக்கமும்  மட்டும் தான் பேண வேண்டும்..  தனது கடமையை முழுமனதுடன் ஒவ்வொருவருக்கும் செய்வதற்காகவே உறவுகள்.

அதில்...  நான் ஏன் இவர்களுக்கு செய்ய வேண்டும்? என்ற எண்ணம் தோன்றக்கூடாது.. பதிலாக நமது கடமையை முழுமையாக நிறைவேற்றத் தான் உறவுகளை ஏற்படுத்திக் கருமையத் தூய்மைக்கு வழி வகுக்கிறது இறையாற்றல்.

கடமையை செய்வதே கர்மயோகம். கருமையத் தூய்மைக்குத் தான் துன்பங்கள் வருகின்றன.. அதை ஏற்றுக் கொண்டு சூழ்நிலையை சாதகமாக்கி *'வாழ்க வளமுடன்'* வாழ்த்து கூறி அனைவரையும் நட்புறவாக்கிக் கொள்ள முடியும். துன்பமும் காணாமல் போய்விடும். தனது கடமைகளும் உணரப்படும்.

அன்புடன் ஜே.கே

No comments: