Thursday, 14 March 2019

அருட்தந்தையோடு அருளானந்தனின் அனுபவங்கள்

அருட்தந்தையோடு அருளானந்தனின் அனுபவங்கள்.

பாகம் : 4

எண்ணியவெல்லாம் எண்ணியபடியே ஆகும்;
எண்ணத்தில் உறுதியும் ஒழுங்கும் அமைந்திடில்.

- ஞானக்களஞ்சியம் பாடல் 1540

அருட்தந்தை அவர்கள் தனது வாழ்வின் அனுபவங்களின் அடிப்படையில் வழங்கயுள்ள இந்தப் பாடலை ஒரு சாமியம் (formula) என்றே கருதலாம்.

இந்தச் சாமியத்திற்குச் சான்றாக அவர்களது வாழ்க்கையில் பல திட்டப்பணிகள் (projects) வெற்றிகரமாக நடந்தேறின. அத்தகையத் திட்டப் பணிகளில் ஒன்றுதான் உலகிலேயே முதன்முதலாக அறிவே தெய்வம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் ஆழியாறில் அமைக்கப்பட்ட 'அறிவுத் திருக்கோயில்'.

அருட்தந்தை அவர்களது உள்ளத்தில் இந்த எண்ணம் எழுந்த நாள் முதல் (உலக சமுதாய சேவா சங்கத்தின்) தலைமையகத்தில் நடைப்பெற்ற கூட்டுத்தவ முடிவில் (1983 ஆம் ஆண்டு) இதனை அறிவித்த நாள் வரை சங்கத்தின் பொருளாதார நிலை அத்தகைய திட்டப்பணியை முடிப்பதற்குப் போதுமானதாக இல்லை.

எனவே இதனை அறிந்தவர்களில் மேலே குறிப்பிட்ட சாமியத்தை அறியாதவர்கள்,பெருமளவு தொகையைச் செலவு செய்து இந்தத் திட்டப்பணியை வெற்றிகரமாக முடிக்க முடியுமா என்று எண்ணியது இயல்புதான். ( வியாப்பதுமில்லை).

இருப்பினும், உலக மக்களின் மேன்மைக்காகப் பயன்படவுள்ள ஒழுங்கும், இந்த எண்ணம் நிறைவேற வேண்டும் என்ற உறுதியும் அருளாசான் அவர்களின் எண்ணத்தில் இருந்தன. எனவே, இந்த எண்ணம் நிறைவேறுவதற்கான சூழ்நிலையை இறையாற்றலே அருட்தந்தை அவர்களுக்கு எவ்வாறு ஏற்படுத்தித் தந்தது என்ற விவரங்களை நாளைத் தெரிவிக்க உள்ளேன்.

தொடரும்....

No comments: