வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! குருவே துணை!!
அருட்தந்தையோடு அருளானந்தனின் அனுபவங்கள்.
பாகம் 1.
அன்பு நண்பர்களே!
உங்கள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள் ! வாழ்த்துக்கள்!!
நமது குருபிரான் அவர்களிடம் 1982 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்ஆக்கினை தீட்சைப் பெற்றேன்.
அப்போது தேனாம்பேட்டை, சொக்கலிங்க நகரில், ஒரு வாடகை இல்லத்தில் தங்கியிருந்தார்கள். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைமையகம் அங்கேதான் செயல்பட்டு வந்தது.
அருட்தந்தை அவர்களுடன் அ/நி சௌந்திராஜன் என்ற அன்பர் தங்கியிருந்தார். அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று வருதல் போன்ற பணிகளைச் செய்வதற்கு ஓய்வு பெற்ற அன்பர் திரு.தாஸ் ( அவர்கள் உதவி செய்து வந்தார்.
1982 ஆம் ஆண்டு நமது சங்கம் நிறுவப்பட்டு 24 ஆண்டுகள் முடிந்த பிறகு சங்கத்தின் தலைமையகம் எவ்வாறு இருந்தது? என்பதை நீங்கள் ஊகித்துக் கொள்ள முடியும்.
நமது அருளாசான் அவர்கள் நன்கு திட்டமிட்டு, தமது கடினமான உழைப்பைக் கொண்டும் அவர்களது சொந்த செலவுக்காகப் பயிற்சியினால் பயன்பெற்ற அன்பர்கள் அளித்த அன்பு காணிக்கையைக் கொண்டும், தமது மனதை (அறிவை) பேரறிவோடு இணைத்து நீண்ட நேரம் தவம் செய்த போது உள்ளுணர்வாகக் கிடைக்கப்பெற்ற இறையாற்றலே அவர்களுக்கு வெளிப்படுத்தியதன் மூலம் ( REVELATION) கிடைக்கப்பெற்ற விஞ்ஞானிகளே அறிந்து கொள்ளாத விலை மதிக்க முடியாத தத்துவங்கள் கொண்ட பேரறிவைப் பயன்படுத்தியும், 24 ஆண்டுகளில் ( 1982 முதல் 2006 ஆம் ஆண்டு வரை, வயது 71 முதல் 95 வரை ) அவர்கள் செய்த மகத்தான சேவைகளின் பயனாக பல நூறு மடங்கு பயிற்சியாளர்களின் எண்ணிக்கை உயர்ந்தது என்ற உண்மையைத் தான் ( நான் கண்கூடாகப் பார்த்தது)
உங்களிடம் பகிர்ந்து கொள்ள உள்ளேன்.
தொடரும்....
No comments:
Post a Comment