வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! குருவே துணை!!
அருட்தந்தையோடு அருளானந்தனின் அனுபவங்கள்
பாகம் - 2.
1983 ஆம் ஆண்டு 25 ஆண்டுகள் கழித்து, சென்னை , திருவான்மியூர் வால்மீகி நகரில் சங்கத்தின் தலைமையகம் சொந்தக் கட்டிடத்தில் செயல்படத் தொடங்கியது.
கட்டமைப்பு ( Infrastructure ) மற்றும் ஆசிரியர்களை உருவாக்குதல்.
இந்த மாபெரும் வளர்ச்சி ஏற்படுவதற்கு ஏதுவாக நமது அருட்தந்தை அவர்கள் பல மனவளக்கலை மன்றங்களைத் தோற்றுவித்தார்கள். நூற்றுக் கணக்கான ஆசிரியர்களையும் உருவாக்கினார்கள்.
ஆழியாறு அறிவுத்திருக்கோயில்.
அருளாசன் அவர்கள் 'அறிவே தெய்வம்' என்னும் கொள்கையின் அடிப்படையில், உலகிலேயே முதன்மையானதான அறிவுத்திருக்கோயிலை, கோயமுத்தூர் மாவட்டத்தில், ஆனமலை அடிவாரத்தில், அழகான இயற்கை அழகு கொண்ட சூழலில் அமைத்தார்கள். 1990 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அறிவுத்திருக்கோயிலை, முன் மாதிரியாகக் கொண்டு தமிழ்நாட்டின் பல ஊர்களிலும், வேறு மாநிலங்களிலும் பல அறிவுத் திருக்கோயில்களை அமைப்பதற்கு அன்பர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்தார்கள்.
ஒரு வார சிறப்புப் பயிற்சிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சிகளை 1990 ஆம் ஆண்டு வரை தனது 79 ஆம் வயது வரை அருட்தந்தை அவர்களே நடத்துதல்.
1989 முதல் 1990 ஆண்டு வரை, ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் 4 அல்லது 5 அகத்தாய்வு பயிற்சிகளையும், 2 அல்லது 3 ஆசிரியர் பயிற்சிகளையும் நடத்துவார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 மாதங்கள் அமெரிக்கா போன்ற அயல் நாடுகளில் சேவை செய்வார்கள்.
இந்தியாவில் தங்கியிருக்கும் போது, புதுதில்லி, மும்பை போன்ற நகரங்களிலும், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் பயிற்சிகள் நடத்துவார்கள்.
எனவே 1985 ஆம் ஆண்டு தான் சேலம் நகரத்திலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள
ஒரு திருமண மண்டபத்தில் நடைப்பெற்ற அகத்தாய்வுப் பயிற்சியில் கலந்துகொள்ளும் நல்வாய்ப்பைப் பெற்றேன்.
பின்பு அதே ஆண்டில், பொள்ளாச்சியில் உள்ள 'காந்தி மண்டபம்' எனும் திருமண மண்டபத்தில் அருட்தந்தை அவர்கள் நடத்திய ஒருவார ஆசிரியர் பயிற்சியை முடித்து ஞானாசிரியர் சான்றிதழை அருட்தந்தை அவர்களிடம் பெற்றேன்.
தொடரும்.....
No comments:
Post a Comment